தீபாவளியை முன்னிட்டு ரங்கோலி போட்டி - ரங்கோலி வரைந்து அசத்திய பெண்கள்

குஜராத்தில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான ரங்கோலி போட்டியில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தீபாவளியை முன்னிட்டு ரங்கோலி போட்டி - ரங்கோலி வரைந்து அசத்திய பெண்கள்
Published on
குஜராத்தில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான ரங்கோலி போட்டியில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இப்போதிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. இதை முன்னிட்டு, ராஜ்கோட் பகுதியில் நடத்தப்பட்ட ரங்கோலி போட்டியில், சுமார் 77 பெண்கள் கலந்து கொண்டு 125க்கும் அதிகமான ரங்கோலிகளை வரைந்து அசத்தினர். அதில், ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் நிரஜ் சோப்ரா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன.
X

Thanthi TV
www.thanthitv.com