திருப்பதியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவாமி தரிசனம்
Published on
ஆந்திராவில், சுற்று பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று இரவு திருமலைக்கு சென்றார். இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு, ராம்நாத் கோவிந்துக்கு, அறங்காவலர் குழு சார்பாக தீர்த்த பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இன்று பிற்பகல் திருமலையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா செல்லும் குடியரசு தலைவர், நாளை அதிகாலை ஏவப்பட இருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தை பார்வையிட உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com