"புதிய கல்வி கொள்கை அமலால் இந்தியாவின் பழம்பெருமை திரும்பும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

நவீன கல்வி முறையில் இந்தியாவின் உயர் கல்வி நிலையங்களால் உயர்ந்த நிலையை எட்ட முடியவில்லை என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
"புதிய கல்வி கொள்கை அமலால் இந்தியாவின் பழம்பெருமை திரும்பும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை
Published on

தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான கருத்தரங்கில் காணொலி காட்சி மூலம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பண்டைய காலங்களில் இந்தியாவின் கல்வி முறை உலக அளவில் கவனிக்கத்தக்க நிலையில் இருந்ததாகவும் தற்போது உள்ள நவீன கல்வி முறையில் இந்திய உயர் கல்வி நிலையங்களால் உயர்ந்த நிலை எட்ட முடியவில்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் புதிய கல்வி கொள்கையால் அதை ஈடு செய்ய முடியும் என்றார். 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை சமாளிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை முறையாக அமல் படுத்தப்படும் பட்சத்தில் இந்தியாவின் பழம்பெருமை திரும்பும் என நம்புவதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com