அந்தோணியார்புரத்தில் எடிசன் என்பவரது வீட்டில், குழி தோண்டிய போது, வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த வெடி பொருட்கள் குறித்து தகவலறிந்த போலீசார்,வெடிபொருட்களை மீட்டு பாதுகாப்புடன் வைத்துள்ளனர். இந்நிலையில், எடுக்கப்பட்ட வெடிபொருட்களை திருவாடானை நீதிபதி பாலமுருகன் நேரில் வந்து பார்வையிட்டு சென்றார். இந்த வெடி பொருட்களை, அகற்றாமல் உள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.