உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில், இந்தியா முதலிடம் பிடித்திருப்பதற்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
Published on
பாலியல் வன்கொடுமைகள் - பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்து கொள்வது - பொது இடங்களில் பாலியல் சீண்டல்கள்- குடும்ப வன்முறைகள் என இவைகள் அனைத்தும் பெண் களுக்கு எதிரான கொடுமைகள் என பட்டியலிட்டுள்ள டாக்டர் ராமதாஸ், இவை அனைத்துமே தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். எனவே, மகளிர் எந்தெந்த வகைகளில் எல்லாம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதையும், அதற்கான தீர்வுகள் என்ன என்பதையும் வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்து, மகளிருக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த தனிக்கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கெல்லாம் மேலாக , மகளிருக்கு எதிரான குற்றங்கள் களைய, தமிழகத்தில் பூரண மது விலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com