நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்யநாராயணராவின் மனைவி கலாவதி, உடல்நலக்குறைவால் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கலாவதி நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. கர்நாடகாவில் நடைபெற்ற கலாவதியின் இறுதிச் சடங்கில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் பங்கேற்றனர். இளம் பருவத்தில் அண்ணனுடன் வசித்து வந்த ரஜினிகாந்த், அண்ணியின் மறைவால் மிகவும் சோகமாக காணப்பட்டார்.