Rajasthan Crime | கால்களை வெட்டி புதரில் வீசிய கொடூரம் | அலறிய மூதாட்டி

x

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோப்பூர் பகுதியில், 65 வயதாகும் கமலாதேவி என்பவர் கூலித்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். வேலை வாங்கித்தருவதாகக்கூறி மூதாட்டியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற இருவர், அவரது காலை வெட்டி, வெள்ளி சிலம்பை திருடிக்கொண்டு, புதரில் வீசிச் சென்றுள்ளனர். இதையடுத்து உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக பயிர்வா என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த சோனியா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்