"ராஜபக்சே-க்கள் பதுக்கிய பணத்தை மீட்டால் வரிவசூல் தேவையில்லை" - இலங்கை முன்னாள் அதிபர் பரபரபரப்பு

இலங்கையில் ராஜபக்சே-க்கள் திருடிய பணத்தை திரும்பப்பெற்றால், பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என, முன்னாள் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி மாதம் முதல், வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்பட கூடாது என்றும் தெரிவித்தார். ராஜபக்சே-க்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள நிதியை மீட்பதே இதற்கான தீர்வாக அமையும் என்றும் சந்திரிகா குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com