Rains | North India | இடி, மின்னலுடன் மழை | எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

Rains | North India | இடி, மின்னலுடன் மழை | எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

வட மாநிலங்களில் வரும் 6ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசைக் காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய பகுதிகளில் பரவலாக மழையும் பனிப்பொழிவும் காணப்படும் வாய்ப்பு உள்ளது. பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மே 4 மற்றும் 5ஆம் தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நிலச்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com