நடப்பு நிதியாண்டில் ரயிலில் டிக்கெட் இன்றி இத்தனை கோடி பேர் பயணமா?
நடப்பு நிதியாண்டில் ரயிலில் டிக்கெட் இன்றி சுமார் ஒரு கோடியே 78 லட்சம் பேர் பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு ரயில்வே வாரியம் பதிலளித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஒன்பது மாதத்தில் மட்டும் ரயிலில் டிக்கெட் இன்றியும், பதிவு செய்யப்படாத லக்கேஜுடனும் ஒரு கோடியே 78 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து அபராதமாக ஆயிரத்து 17 கோடியே 48 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
குறைந்த அளவிலான ரயில் சேவைகள் மற்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதே டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.
2020-21 ம் நிதியாண்டில் ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சமாக இருந்த நிலையில், 2019-20 ம் நிதியாண்டில் அது ஒரு கோடியே 10 லட்சமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
