சோனு சூட் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்...
சோனு சூட் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை
Published on

கொரோனா பெருந்தொற்றின் கோரத்தை இந்தியா சந்தித்துக்கொண்டிருந்த சமயத்தில், உயிர்காக்கும் உதவிகளை செய்து தேசம் முழுவதும் கவனம் பெற்றவர் சோனு சூட்...

அருந்ததி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர், ஊரடங்கு சமயத்தில் ரியல் ஹீரோ என போற்றப்பட்டார்.

வெளிமாநிலங்களில் சிக்கித்தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அழைத்து செல்ல பேருந்து, விமானங்களை அனுப்பியது தொடங்கி,

இரண்டாம் அலையின் போது உயிர் காக்கும் ஆக்சிஜன் வழங்கியது என அவர் செய்த இன்றியமையா உதவிகள் தான் அவரை போற்றுவதற்கு காரணம்.

இந்த சூழலில் சோனு சூட்டிற்கு சொந்தமான நிறுவனம், அண்மையில் லக்னோவை சார்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதை காரணமாக கொண்டு மும்பையில் உள்ள அலுவலகம் உட்பட சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனையில் நடத்தியது வருமான வரித்துறை

வியாழக்கிழமை காலை சோதனை தொடர்ந்த நிலையில், அவரிடம் வரி ஏய்ப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com