Raid | Bribe | கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி.. ரெய்டில் மலைத்து போன அதிகாரிகள்
Raid | Bribe | கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி.. ரெய்டில் மலைத்து போன அதிகாரிகள் - மிரள வைக்கும் பின்னணி
உத்தரப் பிரதேசத்தில், போக்குவரத்துத் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி லலித் குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் 13 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1.62 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 15 சொத்துகளுக்கான ஆவணங்கள், 2 சொகுசு கார்கள், ஒரு ரிவால்வர், வைரம் மற்றும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. லக்னோ, பாராபங்கி மற்றும் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள், மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. வருமானத்திற்குப் அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
