Rahulgandhi | நாள் ஆக ஆக இந்தியாவில் தெரியும் ஈரான் போர் தாக்கம் - கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல்

Rahulgandhi | நாள் ஆக ஆக இந்தியாவில் தெரியும் ஈரான் போர் தாக்கம் - கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல்

மேற்காசிய போர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தினால் பிரதமர் மோடியால் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள முடியாது என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒருவேளை இந்த விவாதம் நடத்தப்பட்டால் பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் எவ்வாறு சமரசம் செய்யப்பட்டார்? எவ்வாறு மிரட்டப்படுகிறார்? என்பது வெளிவரும் என்பதால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் என்றும் தெரிவித்தார். மேலும், மேற்காசியப் போர் விவகாரம் முக்கியமானது இல்லையா? எரிபொருள் விலை மற்றும் பொருளாதாரச் சீரழிவு விவாதத்திற்கு முக்கியமான விஷயம் இல்லையா? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com