கெஜ்ரிவால் எதிர்பாரா வார்த்தைகளால் தாக்கிய ராகுல் - இந்தியா கூட்டணிக்கு என்னாச்சு?

x

தூய்மையான அரசியல் செய்வதாக உறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மிகப்பெரிய மதுபான ஊழல் செய்தார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்ற்மசாட்டியுள்ளார். டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வினோத் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். ஆட்சிக்கு வந்த புதிதில் சிறிய ரக காரில் வந்த கெஜ்ரிவால், தற்போது ஷீஷ் மகால் என்னும் கண்ணாடி மாளிகையில் வசித்து வருவதாகத் தெரிவித்தார். டெல்லியை மாற்ற வேண்டும் என்று சொன்ன கெஜ்ரிவால், மக்களுக்கு தேவைப்படும் நேரத்தில் காணவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்