"ராகுல் காந்தி தலைவராக தகுதி இல்லாதவர்" - வானதி சீனிவாசன்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தலைவராக தகுதியில்லாதவர் என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். சுகாதார சீர்கேடு, திட்டங்களை செயல்படுத்தாது உள்ளிட்ட மக்களின் கோவம் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெளிப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஆம் ஆத்மி, காங்கிரசின் சந்தர்ப்பவாத கூட்டணியை உணர்ந்து மக்கள் நிராகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த தேர்தல் மூலம் ராகுல் காந்தி தலைவராக தகுதியில்லாதவர் என மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Next Story
