தேர்தல் ஆணையத்தை நோக்கி ராகுல் கிடுக்கிப்பிடி கேள்வி
"மகாராஷ்டிராவிலும், பெங்களூருவிலும் வாக்காளர் மோசடி" - ராகுல் காந்தி
தன்னிடம் பிரமாண பத்திரம் கேட்கும் தேர்தல் ஆணையம், தான் கூறுவதை அனுராக் தாகூர் கூறினால், அவரிடம் பிரமாணப் பத்திரத்தை கேட்காது என ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து பீகாரின் அவுரங்காபாத் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல்காந்தி இதனைத் தெரிவித்தார். இதுபற்றி பேசிய அவர், மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. பின்பு, வெறும் 4 மாதங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி எப்படி அமோக வெற்றி பெற்றது என தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஆராய்ந்ததில், ஒரு கோடி புதிய வாக்காளர்கள் உருவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ராகுல்காந்தி கூறினார். இதுபோன்ற புதிய வாக்காளர்கள் எங்கிருந்தாலும், அங்கு பாஜகவிற்கு வாக்குகள் குறையாமல் அக்கூட்டணி வெற்றி பெற்றதாக சாடியுள்ளார். இதுகுறித்து கேட்ட கேள்விக்குத் தான், தேர்தல் ஆணையம் விளக்கம் தர மறுத்துவிட்டது எனவும், சட்டப்படி சிசிடிவியை அரசியல் கட்சிகள் கேட்டால் பதில் அளிக்காமல் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் மீது அவர் குற்றம் சுமத்தினார். தேர்தல் ஆணையமும், பாஜகவும் இணைந்து பெங்களூருவிலும் இதுபோல திருட்டில் ஈடுபட்டது என உத்தரவாதம் தருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
