"நான் உலகில் யாருக்கும் அஞ்ச மாட்டேன்" - ராகுல் காந்தி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன், யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
"நான் உலகில் யாருக்கும் அஞ்ச மாட்டேன்" - ராகுல் காந்தி
Published on

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன், யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார். பொய்யை உண்மையுடன் வெல்வேன், பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் தன்னால் தாங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் காந்தி ஜெயந்தி என்ற வார்த்தையும் பதிவிட்டுள்ள அவர், உத்தரபிரதேசத்தில் நேற்று தான் கைது செய்யப்பட்ட போது நிகழ்ந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com