பெண்களுக்கு ஆபத்தான நாடு : முதலிடத்தில் இந்தியா, நாட்டிற்கே அவமானம் - ராகுல்காந்தி விமர்சனம்

பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இது நாட்டிற்கே அவமானம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பெண்களுக்கு ஆபத்தான நாடு : முதலிடத்தில் இந்தியா, நாட்டிற்கே அவமானம் - ராகுல்காந்தி விமர்சனம்
Published on

பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இது நாட்டிற்கே அவமானம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

உலக அளவில் பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து 550 பேரை உள்ளடக்கிய உலகளாவிய வல்லுநர்கள் குழு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவில், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்த கருத்துகணிப்பு முடிவு நாட்டிற்கே அவமானம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''பிரதமர் மோடி யோகாசனம் செய்யும் வேளையில், பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்றும், இது நாட்டிற்கே மிகப்பெரிய அவமானம் " என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com