Rahul Gandhi | Election Commission | ராகுல் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்

x

கர்நாடக மாநிலம், ஆலந்த் சட்டப்பேரவை தொகுதியில் 6 ஆயிரத்து 18 வாக்காளர்களின் பெயர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து நீக்கப்பட்டதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், எந்த ஒரு வாக்காளரையும் ஆன்லைனில் நீக்க முடியாது எனவும், படிவம் 7 ஐ, ஆன்லைனில் சமர்ப்பிப்பதன் மூலம் மட்டுமே அந்த வாக்காளரின் பெயர் தானாகவே நீக்கப்படும் என்று அர்த்தமல்ல எனவும், வாக்காளர் பதிவு விதிகள் 1960 இன் படி, பாதிக்கப்பட்ட நபருக்கு அறிவிப்பு வழங்கி அவரை விசாரிக்க வாய்ப்பு வழங்காமல், பட்டியலில் இருந்து எந்த பெயரும் நீக்கப்படாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்