Rahul Gandhi | Congresss vs BJP | ``ராகுலின் அராஜகம்’’ - கொதிக்கும் பாஜக

``ராகுலின் அராஜகம்’’ - கொதிக்கும் பாஜக

#rahulgandhiarrest #congressvsbjp ​மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமூக விரோதிகளுடன் இணைந்து டெல்லியில் அராஜகச் சூழலை உருவாக்க முயல்வதாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ​தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசிய அவர், வாக்காளர் பட்டியலிலிருந்து ஊடுருவல்காரர்களின் பெயர்களை நீக்குவது ஜனநாயகத்தை அச்சுறுத்தும் செயலாகாது என்றும், இதுபோன்ற நபர்களின் உரிமைகளுக்காக போராடும் ராகுல் காந்தியின் நோக்கத்தை இந்திய மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த அராஜக மனநிலைக்கு மக்கள் தகுந்த பதிலளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com