Rahul Gandhi | Congrss vs BJP | ராகுல் கிளப்பிய புதிய பகீர்
பீகாரிலும் வாக்கு திருட்டு நடைபெறலாம் என ராகுல் காந்தி தகவல் ஹரியானாவை தொடர்ந்து பீகாரிலும் வாக்கு திருட்டில் பாஜக ஈடுபடும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு திருட்டின் மூலம் பிரதமராக மோடி பதவியேற்றது குறித்து ஜென் ஸி என்ற இளம் தலைமுறைக்கு ஆதாரபூர்வமாக நிரூபிப்போம் என கூறினார். மேலும், ஹரியானாவில் நடைபெற்ற வாக்கு திருட்டு குறித்து தாம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும், பிரேசில் மாடல் அழகியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, ஒருவரை வாக்களிக்க அனுமதித்தது எப்படி? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய அனைவரும் கூட்டாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிய ராகுல் காந்தி,ஹரியானாவை போல பீகாரிலும் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபடும் என விமர்சித்தார்.
