ட்ரம்ப் சொன்னதை ஒப்புக்கொண்ட ராகுல் - இந்திய அரசியலில் பெரும் பிரளயம்
அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது - ராகுல் காந்தி
இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது உண்மைதான் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சரைத் தவிர அனைவருக்கும் தெரியும் என்றும் விமர்சித்துள்ள அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உண்மைகளை கூறியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். அதானிக்கு உதவுவதற்காக, பாஜக இந்திய பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்பது, முழு உலகிற்கும் தெரியும் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Next Story
