சீறி பாய்ந்து ஓடும் வெள்ளம்.. நீந்தி செல்லும் வாகனங்கள்.. பாலக்காட்டை மிதக்க விட்ட கனமழை

பாலக்காட்டில் பெய்த கனமழையால் சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பாலக்காடு ஓற்றப்பாலம் அனங்கன்பாறை பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையால் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பனமண்ணா சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com