ராகிங் கொடுமை? - கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை

x

கர்நாடகாவில் சக மாணவர்கள் தன்னை துன்புறுத்தியதாக கூறி மாணவி ஒருவர், கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகல்கோட்டை மாவட்டத்தின் குலேடகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் அஞ்சலி முண்டாஸ் என்ற மாணவி, சக மாணவர்கள் இருவர் தன்னைத் துன்புறுத்தியதாகவும்,தன் மரணத்திற்குக் காரணம் இவர்கள் தான் எனவும், கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அஞ்சலியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இது ராகிங் பிரச்சனையாக இருக்குமா? என்ற கோணத்திலும் கல்லூரியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்