ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, ராகுல்காந்திக்கு எதிராக கொல்கத்தாவில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல்காந்தியின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் முழக்கம் எழுப்பினர்.