தெரு நாயை நெரித்துக் கொன்ற மலைப்பாம்பு - நாயை விழுங்க முயற்சித்த வீடியோ வைரல்

தெரு நாயை நெரித்துக் கொன்ற மலைப்பாம்பு - நாயை விழுங்க முயற்சித்த வீடியோ வைரல்
Published on

கேரளாவில், தெரு நாயை கொன்ற மலைப்பாம்பு, அதனை விழுங்க முயற்சித்த வீடியோ வைரலாகி வருகிறது. பத்தனம்திட்டா அருகே மாடப்பள்ளி பகுதியில், கடந்த சில தினங்களாக மலைப்பாம்பு சுற்றித் திரிவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தெரு நாயை நெரித்துக் கொன்று அதனை மலைப்பாம்பு விழுங்க முயன்றதை கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 13 அடி நீளம், 20 கிலோ எடைக் கொண்ட மலைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com