Putin Visit In India | ``இன்னைக்கு Evening நான் அங்க இருப்பேன்..’’

x

இன்று இந்தியா வரும் புதின் - பிரதமர், ஜனாதிபதியை சந்திக்கிறார்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் நாளை நடைபெறும் இருநாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா, ரஷ்யா உச்சி மாநாட்டின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், வணிகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளன. மேலும், இந்தியா - ரஷ்யா இடையே அணுசக்தி புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. இன்று மாலை 4.30 மணி அளவில் டெல்லிக்கு வரும் புதின், இரவு பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்