புஷ்பா 2 மரணம்... ரேவதி குடும்பத்துக்கு ரூ.2 கோடி கொடுத்த புஷ்பா 2 படக்குழு!
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு புஷ்பா 2 படக்குழு சார்பில் இரண்டு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள தியேட்டரில் புஷ்பா-2 சிறப்பு காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்பவர் உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு தயாரிப்பாளர் சார்பில் ஏற்கனவே 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புஷ்பா பட கதாநாயகனான அல்லு அர்ஜுன் ஒரு கோடி ரூபாயும், இயக்குநர் சுகுமார் 50 லட்சம் ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளனர்.
Next Story
