சோனியாவுக்கு நவ்ஜோத் சிங் சித்து 4 பக்க கடிதம் - 2022 பஞ்சாப் தேர்தலை எதிர்கொள்ள வியூகம்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு சித்து 4 பக்க கடிதம் எழுதியுள்ளார்.
சோனியாவுக்கு நவ்ஜோத் சிங் சித்து 4 பக்க கடிதம் - 2022 பஞ்சாப் தேர்தலை எதிர்கொள்ள வியூகம்
Published on

அந்த கடிதத்தில், வருகிற 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான 13 அம்சங்கள் கொண்ட விவரங்களை விளக்கியுள்ளார். இதுவே மீண்டெழுவதற்கான கடைசி வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்து உள்ளார். அந்த கடிதத்தில், போதைப்பொருள் விவகாரம், வேளாண் விவகாரம், வேலைவாய்ப்பு, மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டுள்ளதுடன் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார். வர உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிக்கையில் இடம்பெற உள்ள 13 அம்சங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் சித்து தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com