Punjab IAS Transfer Scam|பஞ்சாப் IAS, IPS டிரான்ஸ்பரில் பல கோடி லஞ்சம்? - உள்ளே இறங்கிய ED
Punjab IAS Transfer Scam|பஞ்சாப் IAS, IPS டிரான்ஸ்பரில் பல கோடி லஞ்சம்? - உள்ளே இறங்கிய ED
பஞ்சாப்பில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தில் நடந்த பல கோடி ரூபாய் லஞ்ச ஊழல் தொடர்பாக, முதல்வர் பகவந்த் மானின் சிறப்புப் பணி அதிகாரி ராஜ்பீர் சிங் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த 26 முக்கிய ஆவண ஆதாரங்களுடன், பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது இந்த விவகாரம் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
