

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவராக அறியப்பட்டவர் புனித் ராஜ்குமார். இந்த நிலையில் அவர் மறைந்த பிறகு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவரது தந்தை ராஜ்குமாரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.