Pune | Bridge issue | நாட்டை உலுக்கிய அடுத்த கோரம்..பாலம் இடிந்து அடித்து செல்லப்பட்ட பல உயிர்கள்...
ஆற்றுப் பாலம் உடைந்து 4 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் ஆற்றுப்பாலம் உடைந்து, 4 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு நள்ளிரவை கடந்தும் மீட்புப் பணிகள் நடைபெற்றன. புனே அருகே உள்ள இந்திரயானி ஆற்றில் கட்டப்பட்டுள்ள பழமையான இரும்பு பாலம், ஞாயிற்றுக்கிழமை மாலை எதிர்பாராத விதமாக உடைந்து விழுந்தது. இதில், பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த பலர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நள்ளிரவைக் கடந்து விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுனவிர், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த மகாராஷ்டிர அரசு, மாநிலம் முழுவதும் உள்ள பழமையான பாலங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
