

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக செயல்பட்ட, இர்பான் நய்ரா, ரியாஸ் நைக்கூ என்பவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏற்கனவே 40 பேர் உயிரிழந்த இடத்தில், ரோந்து வந்த ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் திருப்பி தாக்கியதில், தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.