Puducherry | பரபரப்பான சாலையில் அப்படியே சரிந்து ஈரக்குலையை நடுங்கவிட்ட காட்சி
Puducherry | பரபரப்பான சாலையில் அப்படியே சரிந்து ஈரக்குலையை நடுங்கவிட்ட காட்சி
புதுச்சேரி-சாலையில் பசுமை பந்தல் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு புதுச்சேரி அரசு சார்பில் இந்திரா காந்தி சிலை சதுக்கம் சிக்னலில் அமைக்கப்பட்டு இருந்த பசுமை பந்தல் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அப்போது போக்குவரத்து குறைவாக இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடனடியாக சரிந்த பந்தலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அனைத்து சிக்னல்களிலும் உள்ள பசுமைப் பந்தல்களின் உறுதியை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
