Puducherry | ரீல்ஸ் போட்டு கெத்து காட்டிய ரவுடி.. போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே கொலை

x

புதுச்சேரி லாஸ்பேட்டை அடுத்த நாவர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்கப்பால். 23 வயதான இவர் ஏரியாவில் வளர்ந்து வரும் ரவுடி. இவர் மீது, கொலை முயற்சி,அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. பார்ட் டைமில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ஜாக்கப் பால் சம்பவத்தன்று இரவு லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நண்பரின் மகள் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை கவனித்து விட்டு பைக்கில் வீடு திரும்பி இருக்கிறார். அப்போது காவல் நிலையம் அருகில் வந்த போது 5 பேர் கொண்ட கும்பல், ஜாக்கப் பாலை வழி மறித்து காவல் நிலைய வாசலில் வைத்து அறிவாளால் முகம் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் முகம் சிதைந்து உயிருக்கு போராடிய ஜாக்கப்பாலை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு, ஜாக்கப் பால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்