Puducherry | "புதுச்சேரியில் ரவுடிசம் அதிகரித்துவிட்டது"..சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேதனை
புதுச்சேரியில் ரவுடிசம் அதிகமாக உள்ளதால் தொழிற்சாலைகள் வர தயங்குவதாக சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேதனை தெரிவித்தார். புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அவர், புதுச்சேரி இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் செல்வதால், போதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்தினார். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரியில் ஏராளமான இடங்கள் காலியாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அவற்றை பண்படுத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கலாம் என குறிப்பிட்டார். இதன் மூலம் புதுச்சேரியின் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story
