"10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு துணைத் தேர்வு நடத்த கடிதம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு துணை தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக கல்வித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
"10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு துணைத் தேர்வு நடத்த கடிதம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
Published on

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு துணை தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக கல்வித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி நேரத்தில், அதிகளவில் கூடுவதை தவிர்க்க வலியுறுத்தினார். வியாபாரிகள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வலியுறுத்தினார். சுற்றுலா வாகனங்களுக்கான சாலை வரியை ரத்து செய்யக் கோரும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியதால், போராட்டம் நடப்பதாக குற்றம்சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com