புதுச்சேரி விடுதலை நாள் விழா கோலாகலம்: மக்கள் நலமுடன் வாழ உழைத்து வருகிறோம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி விடுதலை கிடைத்தது.
புதுச்சேரி விடுதலை நாள் விழா கோலாகலம்: மக்கள் நலமுடன் வாழ உழைத்து வருகிறோம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
Published on

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி விடுதலை கிடைத்தது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி விடுதலை நாளாக அரசு கொண்டாடி வருகிறது. இன்று புதுச்சேரி விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறை மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து, மக்கள் சுதந்திரமாக , பாதுகாப்பாக, வளமாக, நலமாக வாழ சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பதை கடமையாக ஏற்று செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com