சூரசம்ஹாரம் பார்க்க சென்ற வீடுகளில் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை - போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரி அருகே சூரசம்ஹார விழாவை பார்க்க சென்ற வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரசம்ஹாரம் பார்க்க சென்ற வீடுகளில் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை - போலீசார் தீவிர விசாரணை
Published on

புதுச்சேரி அருகே சூரசம்ஹார விழாவை பார்க்க சென்ற வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த கரிக்காலம்பாக்கத்தை சேர்ந்த முகுந்தன் என்பவர் சூரசம்ஹார பார்க்க சென்ற போது, அவரது வீட்டில் இருந்து மர்ம நபர்கள், 10 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதேபோல் அதேபகுதியில் காந்தி நகரில் வசிக்கும் குமார் என்பவரும் சூரசம்ஹாரம் பார்க்க சென்ற நிலையில், ஒரு சவரன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் செல்போன்கள் என 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com