Paracetamol | Medicine | பாரசிட்டமல், பிரிம்கிளவ் மருந்துகளுக்கு புதுச்சேரி அரசு தடை

பாரசிட்டமல், பிரிம்கிளவ் மருந்துகளுக்கு புதுச்சேரி அரசு தடை

Paracetamol | Medicine | பாரசிட்டமல், பிரிம்கிளவ் மருந்துகளுக்கு புதுச்சேரி அரசு தடை புதுச்சேரியில் தரம் குறைவான மருந்துகள் விற்பனைக்கு, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை, தொடர்ந்து தடை விதித்து வருகிறது. இமாசல பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரைமஸ் மருந்து நிறுவனம் தயாரிக்கும் பிரிம்கிளவ் ஊசி மருந்தும், பின்னாகிள் லைப் சயின்ஸ் தயாரிக்கும் அசிடமோல்-500 என்ற பாரசிட்டமல் மாத்திரையும் தரமின்றி இருப்பதால், அவற்றை புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காலாவதியான மருந்துகள் அழிப்பு விவரங்கள் மற்றும் 3ம் தரப்பு மருந்து கொள்முதல் விபரங்களை கட்டாயம், மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com