புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு - சிறையில் கைதி தற்கொலை..

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு - சிறையில் கைதி தற்கொலை..
Published on

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில், கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் மற்றும் விவேகானந்தன் என்ற முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதியவர் விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போதே தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இதனால் இவர்களை கண்காணிக்க தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், விவேகானந்தன் சிறையில் உள்ள கழிவறையில்​ தனது துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, அவரது உடலை சிறை அதிகாரிகள் மீட்டு, காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com