Puducherry Congress திமுகவுக்கு ஒதுக்கியதால் காரின் குறுக்கே படுத்து காங்கிரஸ் `பெரும்புள்ளி’ தர்ணா

Puducherry Congress திமுகவுக்கு ஒதுக்கியதால் காரின் குறுக்கே படுத்து காங்கிரஸ் `பெரும்புள்ளி’ தர்ணா

மங்களம் தொகுதி சர்ச்சை - காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் தர்ணா புதுச்சேரியில் கூட்டணி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மங்களம் தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ரகுபதி போராட்டத்தில் ஈடுபட்டார். மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் வெளியே வந்தபோது, அவரது கார் முன்பு திடீரென படுத்து தர்ணா செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பால் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com