புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை
Published on

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மருத்துவக் குழுக்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை, அவர் பிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புதுச்சேரியில் கொரோனா பாதிப்பிற்கு, சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனை, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜிப்மரில் திறக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் 2 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த முடிவுகளை அறியலாம் என்றும் வெளிநாட்டு பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு பிறகே, புதுச்சேரிக்குள் அனுமதிக்கப் படுவதாகவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com