

அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம், முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார்.
புதுச்சேரியில் அண்மையில் நடந்த தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. முதலைச்சராக மே 7 ஆம் தேதி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். இந்நிலையில், இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசையை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து அமைச்சரவை தொடர்பான பட்டியலை முதல்வர் ரங்கசாமி அளித்துள்ளார். பா.ஜ.க. வில் இருந்து 2 பேரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 பேரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னர் , நாளை அல்லது வரும் 27 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த பட்டியல் மூலம் 52 நாட்கள் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது