புதுச்சேரி முதலமைச்சர், சபாநாயகர் வீடுகளை முற்றுகையிட முயன்ற பா.ஜ.கவினர் கைது

பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் அனுமதி மறுப்பு காரணமாக முற்றுகை முயற்சி
புதுச்சேரி முதலமைச்சர், சபாநாயகர் வீடுகளை முற்றுகையிட முயன்ற பா.ஜ.கவினர் கைது
Published on

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு பா.ஜ.க சார்பில் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஓராண்டாக அவர்களுக்கு சட்டமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், நியமன உறுப்பினர்கள் அவைக்குள் அனுமதிக்க உத்தரவிட்டும் தொடர்ந்து மறுத்து வருகிறது புதுச்சேரி மாநில அரசு.இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் வீடுகளை முற்றுகையிட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடும் வாக்குவாதங்களுக்கு பிறகு போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com