புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் - அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்

புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் - அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்
Published on

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறிய குற்றச்சாட்டுகளை, அமைச்சர் லட்சுமி நாராயணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பொதுப்பணி​த்துறையில் 30 சதவீதம் கமிஷன் பெற்று டெண்டர் விடப்படுவதாக நாராயணசாமி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆதாரங்கள் இருந்தால் புகார் அளித்து வழக்கு தொடரட்டும் என்றும், அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்காக 400 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளதாகவும், நிதி கிடைத்த உடன் விமான விரிவாக்க பணிகள் தொடரும் என்றும் கூறினார். தரமான சாலைகள் அமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com