Puducherry | அரசியல் மோதலில் 4 நிர்வாகிகள் கைது புதுச்சேரியில் பரபரப்பு
அரசியல் மோதலில் 4 நிர்வாகிகள் கைது புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரியில் அரசியல் மோதல் - 4 காங்கிரஸ் நிர்வாகிகள் கைது புதுச்சேரியில் பாஜக - காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காங்கிரஸ் நிர்வாகிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில் பாஜகவினர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினர், பாஜக அலுவலகம் நோக்கி சென்றதுடன் பிரதமரின் உருவ பொம்மையை எரித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் நிர்வாகிகளான சிலம்பரசன், சுரேந்தர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
