PT Usha | PT உஷாவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

PT உஷாவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

பி.டி.உஷாவின் கணவர் ஸ்ரீனிவாசன் திடீர் மரணம் ராஜ்யசபா எம்பியும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான பி டி உஷாவின் கணவர் ஸ்ரீனிவாசன், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். 64 வயதான அவரை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவரது இறுதி நிகழ்ச்சி மாலை கோழிக்கோட்டில் நடைபெறவுள்ளது. ஸ்ரீனிவாசன், மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com