நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61 - தொடங்கியது கவுன்ட் டவுன்

x

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதற்கான 22 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது.

புவியின் கண்காணிப்புக்காக ஆயிரத்து 696 கிலோ எடை கொண்ட இஒஎஸ்-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட்டுக்கு தேவையான திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளன. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்