தர்காவை இடிக்க எதிர்ப்பு -போலீசார்மீதுதாக்குதல்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட தர்காவை மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்பிற்காக நின்ற காவல்துறையினர் மீது கும்பல் ஒன்று கல் வீசி தாக்குதல் நடத்தியதில் 21 காவலர்கள் காயமடைந்தனர். மேலும் காவல்துறையின் நான்கு வாகனங்களும் வன்முறையில் சேதமடைந்தன. கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு , கண்ணீர் புகைகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு பலத்த பாதுகாப்புக்கு இடையே சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறப்படும் சாத் பீர் பாபா என்னும் தர்கா இடித்து அகற்றப்பட்டது.
Next Story
